இருபதாம் நூற்றாண்டின் இலக்கியப் பங்களிப்பிற்குத் திராவிட இயக்கம் சார்ந்த இலக்கிய வாணர்கள் குறிக்கத்தக்க பணிகளை ஆற்றியுள்ளனர். தந்தைப் பெரியார், அறிஞர் அண்ணா போன்றவர்களை முன்னவர்களாகக் கொண்டு தமிழ் இனத்தின் முன்னேற்றத்திற்கான ஆக்கப்பணிகளை இதழ்கள் வாயிலாகவும், படைப்புகள் வாயிலாகவும், ஆய்வுகள் வாயிலாகவும் திராவிட இலக்கிய வாணர்கள் திறம்பட செய்தனர். இவர்களுக்கு குறிப்பிடத்தக்க படைப்பாளர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சார்ந்த எஸ். எஸ். தென்னரசு ஆவார். இவரின் வாழ்வினை எடுத்துரைத்து இவர் படைத்த சேதுநாட்டுச் செல்லக்கிளி என்ற நாவலை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
எஸ். எஸ். தென்னரசு பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆகும். இவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டராக விளங்கியவர். அறிஞர் அண்ணாவின் அரவணைப்பினைப் பெற்றவர். கலைஞர் மு. கருணாநிதியுடன் இவர் இலக்கியத் தோழமை பெற்றிருந்தார். சிறுகதை மன்னன் என்று போற்றப்பெறும் அளவிற்கு சிறுகதைப் படைப்புகளை அளித்தவர்.
சேது நாட்டுச் செல்லக்கிளி - Sethu Naatu Sellakili
- Brand: எஸ்.எஸ். தென்னரசு
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹80
Tags: sethu, naatu, sellakili, சேது, நாட்டுச், செல்லக்கிளி, , -, Sethu, Naatu, Sellakili, எஸ்.எஸ். தென்னரசு, சீதை, பதிப்பகம்