• செவக்காட்டுச் சித்திரங்கள்
இன்றைய சூழலில், நகரத்தில் வாழும் மனிதன் பல துறைகளில் வசதி வாய்ப்புகள் பெற்று வளர்ச்சி அடைந்திருக்கிறான் என்ற போதிலும், கிராமத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதனின் வளர்ச்சி என்றுமே கேள்விக் குறிதான்! மாறிவரும் காலமாற்றத்தால், கிராமங்களில் பழைய வீடுகள் இடிக்கப்பட்டு விண்ணை நோக்கி சொகுசு கட்டடங்கள் எழும்பி நிற்கின்றன. இறக்குமதி செய்யப்பட்ட அதிவிரைவு வாகனங்கள்,வெளிநாட்டு உணவு வகைகள் என கிராமங்களும் தங்கள் இயல்பைத் தொலைத்து வருகின்றன. ஆனால், அங்கு வாழும் பகட்டு இல்லாத சாதாரண மக்களின் வாழ்க்கை, அந்த மண்ணில் தொடர்ந்து உழன்று கொண்டுதானிருக்கிறது. அப்படிப்பட்ட வறட்சியான செம்மண் காட்டில், தான் சிறுவனாக இருந்தபோது வேப்பம் முத்து பொறுக்கி, பால்பவுடர் ருசித்ததையும், கோலிக்குண்டு உருட்டி, மல்லுக்கட்டி விளையாடியதையும், அம்மாவுக்குத் தெரியாமல் தோசையை எடுத்து முழுங்கும்போது தொண்டை அடைத்துக்கொண்டு 'தோசை முழுங்கி' என்ற பட்டப் பெயர் பெற்றதையும், கணக்குப் பரீட்சை பேப்பர் முழுக்க 'மூக்காண்டி வாத்தியார்' பட்டப் பேரை எழுதி அடிவாங்கியதையும் மண் வாசனை கெடாமல் எழுத்துச் சித்திரங்களாகத் தீட்டியுள்ளார் நூலாசிரியர் வே.இராமசாமி. இந்த நூலைப் படிக்கப் படிக்க, நமது இளம் பிராயத்து சம்பவங்களும் நினைவுகளும் காட்சிகளாக விரிந்து அந்த செவக்காட்டுக்கே அழைத்துச் செல்வதை உணரமுடியும். கிராமத்துக்கே உரிய கிண்டலும் கேலியும் காதலும் ரோசமும் நூல் முழுக்க விரவிக்கிடக்கின்றன. இளவட்டக்கல் தூக்கும் முத்துக்காளை, மடை ஏறாம கிடக்கும் தண்ணியை இறைவெட்டிப் போட்டு இறைக்கும் மயில்சாமி, புழுதியில் பல்டியடித்துக் கிடந்த ராசேரிக் கோனார், தைலாங்கிழவி போன்ற பாத்திரப் படைப்புகள் ஓவியர் சேகரின் கோட்டோவியங்களில் உயிர் பெறுகின்றன. நகரத்தில் உள்ளவர்கள் கிராமத்து வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதற்கும், கிராமத்தில் வாழ்பவர்கள் தங்கள் வாழ்வு கரைந்துகொண்டு வருவதை உணர்ந்துகொள்வதற்கும் இந்த நூல் ஒரு காலக்கண்ணாடி.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

செவக்காட்டுச் சித்திரங்கள்

  • ₹45
  • ₹38


Tags: sevakaatu, chithirangal, செவக்காட்டுச், சித்திரங்கள், வே. ராமசாமி, விகடன், பிரசுரம்