தொன்மைத் தமிழுக்குத் தொண்டு ஆற்றி, இசைத்தமிழுக்கு மகுடம் சூட்டிய அண்ணாமலை அரசர் பெயரால் அமைந்து இருக்கின்ற இந்த மன்றத்தில், இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொள்வதற்கு அனுமதி கொடுத்த அண்ணாமலை மன்ற நிர்வாக உறுப்பினர்களுக்கு, முதலில் என் இதயம் பொங்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐப்பசித் திங்களின் மழைத் துளிகளுக்கு மத்தியில், இந்த அரங்கம் நிறைந்து அரங்கத்துக்கு வெளியேயும் ஆயிரம் ஆயிரமாக வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கின்ற தமிழ்ப்பெருங்குடி மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈழத்தில் நடப்பது என்ன? ‘உப்புக்கரிக்கும் கடல் நீர் தமிழர்கள் சிந்திய கண்ணீர்’ என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் மணிவாசகங்களை முன்னிறுத்தி, இந்தக் கருத்து மேடையை நாங்கள் அமைத்து இருக்கின்றோம். இருதயத்தைக் குத்திக் கிழிக்கின்ற இரத்தமயமான சோகக்காட்சி ஒன்றை இந்த மேடையின் பின்புறத்தில் சித்திரித்து இருக்கின்றோம்.
சிங்களத்துப் புயல் - Singalathu Puyal
- Brand: உதயணன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹100
Tags: singalathu, puyal, சிங்களத்துப், புயல், , -, Singalathu, Puyal, உதயணன், சீதை, பதிப்பகம்