• சிந்திக்க சிரிக்க முல்லாவின் கதைகள்
முல்லா நஸ்ருத்தீன் ஒருநாள் சத்திரத்தில் தங்க நேரிட்டது.சத்திர உரிமையாளர் முல்லாவிடம், மேன்மையான விருந்தாளி தங்குவதற்கு வந்ததால் தான் மிகவும் சந்தோஷமடைவதாகக் கூறிக் கொண்டார். “என்ன தேவைப்பட்டாலும் உடன் கூப்பிடுங்கள்’ என்று முல்லாவிடம் சொன்னார் அவர். இரவு நேரத்தில் முல்லாவுக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது. தண்ணீர் வேண்டும் என்று கூப்பிட்டுப் பார்த்தார். யாரும் எட்டிப் பார்க்கவில்லை. தொண்டை வறண்டு போய் விட்டதால் வாயில் நெருப்பு பற்றியது போல் உணர்ந்தார் முல்லா. ‘தீ! தீ!’ என்று அலறத் தொடங்கினார் முல்லா. மொத்த சத்திரமும் விழித்துக் கொண்டது. உரிமையாளர் பெரிய பாத்திரத்தில் நீரைத் தூக்கிக் கொண்டு பதறியடித்து ஓடிவந்தார். “எங்கே நெருப்பு?’ முல்லா தன் வாயைத் திறந்து காட்டி “இங்கே’ என்றார்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சிந்திக்க சிரிக்க முல்லாவின் கதைகள்

  • ₹90