ஒரு சாதாரண கல் நீரின் கூர்மையால் செதுக்கப்பட்டு கூழாங்கல்லாகி பளிங்குபோல் மினுமினுக்கும் தன்மையுடையதாகிறது. மிகக் கடினமான இரும்பு நெருப்பின் பாய்ச்சலால் மிருதுவாகி இளகி மென்மையாகிறது.
கல்லாகவும் இரும்பாகவும் இருக்கும் மனிதமனதை பளிங்காக்கி மினுமினுப்பாகவும் இளக்கி மென்மையாகவும் மாற்றவல்ல இரு கருவிகள் தான் அன்பும் மன்னிப்பும்.
மிகச் சிக்கலானமனித மனதிற்குள் இந்த அன்பையும் மன்னிப்பையும் துளையிட்டு இறக்குவதற்குத்தான் கவிதை என்னும் ஆயுதத்தை மொழிவடிவில் கையில் எடுத்திருக்கிறேன்.
Tags: siragugalin, isai, சிறகுகளின், இசை, பரிதி, வானவில், புத்தகாலயம்