சிறை !
ஆயிரம் குற்றவாளிகள் சட்டத்தின் இண்டு இடுக்குகளில் தப்பித்துக் கொண்டாலும், நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதில் சட்டத்தை ஆள்பவர்கள் அக்கறையோடு இருக்க வேண்டுமென்பதை இந்நாவலில் வலியுறுத்துகிறார் ஆசிரியர்! பயங்கரவாதத்தின் கொடுமையை மென்மையான காதல் கருவைப் பின்னணியாகக் கொண்டு 18 அத்தியாயங்களில் செய்திடும் விதத்தில் அமைத்துள்ள ஆசிரியர் பாராட்டுக்குரியவர். தனிமைச் சிறையில் வாடும் பத்திரிகை நிருபரைச் சுற்றி கதை தொடங்கி கிளைபரப்பிக் கொண்டே செல்லும் வேகம், விறுவிறுப்பு..அப்பப்பா...! அருமையான உத்தி... அருமையான சமூக நாவலை எழுத வாய்ப்பளித்த எழுத்தாளர் வாஸந்தி அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி. வாசக அன்பர்கள் இந்நாவலை பெரிதும் வரவேற்பார்கள் என நம்புகிறேன். படிப்பவர்களின் மனதைக் கண கணக்கச் செய்யும் என நம்புகிறோம்.
Tags: sirai, சிறை-Sirai, வாஸந்தி, கவிதா, வெளியீடு