குடும்பம், அலுவலகம், நண்பர்கள் என்ற பல்வேறு உறவுகள்தான் நமது உணர்வுகளுக்கு வேண்டிய பலத்தை அளிக்கின்றன. கணவன்_மனைவி உறவு, குழந்தைகளின் இயல்பு, பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளின் ஆர்வங்கள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு, நண்பர்களின் உதவும் மனப்பான்மை, சக பயணிகளின் நடத்தை... என அன்றாடம் நாம் சந்திக்கும் பல மனிதர்களின் குணங்களையும், உணர்வுகளையும் அடிப்படையாக வைத்து இந்த நூலில் ஓர் அருமையான உறவுப் பாலம் அமைத்துள்ளார் நூலாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன். ஆனந்த விகடன் இதழில் ‘சிறிது வெளிச்சம்!’ என்ற தலைப்பில் வெளிவந்து, வாசகர்களின் இதயக் கதவைத் திறந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்! வாழ்க்கையில் நாம் என்னவெல்லாம் செய்யத் தவறியிருக்கிறோம் என்பதையும், கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும், நம்மை நாமே பார்த்துச் சீர்படுத்திக் கொள்ளும் கண்ணாடியாக இந்தக் கட்டுரைகள் பிரதிபலிக்கின்றன. அன்றாட வேலைப்பளுவினால், தங்களைச் சூழ்ந்துள்ள மனிதர்களை விட்டு விலகி திசை தெரியாமல் ஓடுகிறார்கள். ரயிலிலோ, பேருந்திலோ பயணிக்கும்போது மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தவறுகிறார்கள். இவற
சிறிது வெளிச்சம்! - Siridhu Velicham
- Product Code: தேசாந்திரி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹450
Tags: siridhu, velicham, சிறிது, வெளிச்சம்!, -, Siridhu, Velicham, , தேசாந்திரி, பதிப்பகம்