தவசி கருப்புசாமி தொகுத்துள்ள அருங்கூத்து, ' கொங்கு மண்டல நிகழ்த்துக்
கலைஞர்களின் வாழ்வியல் பதிவு 'என்பது மேற்கத்திய பாணி மரபின்
முக்கியத்துவம், கலை, விழுமியம், பண்பாடு குறித்த பல்வேறு சிந்தனைகளுக்கு
பதிலளிக்கும் விதமாகவும், அதன் இருப்பை வெளிப்படுத்துபவையாகவும் உள்ளது.
அருங்கூத்துபொதுவாக சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதிகளை மையமிட்டு சேகரித்த
தெருகூத்து தகவல் களஞ்சியம் என்று சொல்லலாம்.இந்நூலில் லட்சுமி அம்மாள்,
எலிமேடு மகாலிங்கம், எலிமேடு வடிவேல் போன்ற ஏழு கலைஞர்களிடம் வினா-நிரல்
அடிப்படையிலும், கொத்தாபாளையம் குருநாத வாத்தியார், கூத்திசை மேதை
செல்லப்பன் போன்ற நான்கு கலைஞர்களின் வாழ்நாள் கலைப்பணியை தன் வரலாற்று
வடிவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இடையிடையே அமரர் பெரிய குழந்தை, அமரர்
வேங்கிப்பாளையம் முத்து, மனோன்மணி போன்ற இருபத்தி ஏழு கூத்துக் கலைஞர்களின்
வாழ்க்கைக் குறிப்புகளும் தரப்பட்டுள்ளது.
Tags: siriyathe, azhagu, அருங்கூத்து, தவசிக்கருப்புசாமி, எதிர், வெளியீடு,