தமிழ்க் கவிதை மரபின் நீண்ட நெடிய தொடர்ச்சியின் கடைசிக் கண்ணியாகத் தன்னைப் பாவிக்கும் புதுக்கவிஞனான விக்ரமாதித்யன், வாழ்க்கைப் பார்வை, உள்ளடக்கம் சார்ந்து நவீனத்துக்கும் மரபுக்கும் இடையிலான திரிசங்கு நிலையில் இருக்கிறார். யாத்திரையில் இருக்கும்போது வீட்டைப் பற்றிய ஞாபகம்; வீட்டிலிருக்கும்போது யாத்திரை பற்றிய ஞாபகம்; மனம் செல்லும் இடத்தில் உடல் இல்லை; உடல் செல்லும் இடத்தில் மனம் இல்லாமல் போகும் திரிசங்கு நிலைதான் விக்ரமாதித்யனின் வாழ்வும் கவிதையும். மனமும் உடலும் அபூர்வமாக ஒத்திசைந்திருக்கும்போதான கவிதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். நாடோடி, சித்தர், யாத்ரிகர் என விக்ரமாதித்யனுக்குப் பல படிமங்கள். வாழ்க்கை அவரை நாற்திசைகளிலும் தூக்கியெறிந்து சிதறடித்திருக்கிறது. ஆனால் தனது இதயத்துக்கு அருகில் அவர் காலம்காலமாகப் பராமரித்துவரும் சுயத்தை, தனது செருப்பைப் போலவோ உடைகளைப் போலவோ தொலைக்கவே முடியாதவர் விக்ரமாதித்யன். அந்தச் சுயம்தான் விக்ரமாதித்யன் என்ற கவிஆளுமையின் சொர்க்கமும் நரகமும். - ஷங்கர்ராமசுப்ரமணியன்
சிறுகோட்டுப் பெரும்பழம் - Sirukottu Perumpazham
- Brand: விக்ரமாதித்யன்
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹300
Tags: sirukottu, perumpazham, சிறுகோட்டுப், பெரும்பழம், -, Sirukottu, Perumpazham, விக்ரமாதித்யன், டிஸ்கவரி, புக், பேலஸ்