• சிவ யோக ஞானத்திறவுகோல் - Siva Yoga Gnyana Thiravukkol
நூல் பற்றி: படைப்பினதும் படைப்பின் வழியாகத் தோன்றிய பிரபஞ்சத்தினதும் சூட்சுமங்களை பாரதத்தின் ஞான மரபு பல்லாயிரம் ஆண்டுகளாக அகவயமான தேடலின் வழியாகக் கண்டடைந்திருக்கிறது என்பதற்கு நம் மத்தியில் அவதரித்து வாழ்ந்த ஞானியர் தொகை சான்று. அத்தகையதோர் ஞானியர்கோன் மாணிக்கவாசகர். பிறருக்குப் பிண்டமாகத் தோன்றும் மனித உடல் யோகியருக்கு அண்டமாகவும் யோக சித்தி எய்துவதற்கான தோணியாகவும் எப்படிப் பயன்படுகிறதோ, அதேபோலவே அவர்களது வாய்மொழியும் சாதாரணமாகப் பார்க்கும்போது ஒரு பொருளையும் தியான சாதனை கைகூட நோக்கும்போது வேறோர் ஆழ்ந்த பொருளையும் உணர்த்தும் விதமான சூட்சுமங்களைக் கொண்டுள்ளது. இதுவரை மாணிக்கவாசகரை ஒரு சிவபக்தர் என்ற அடிப்படையிலேயே, அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளார்கள். ஆனால், உண்மையில் மாணிக்கவாசகரது சிவபுராணம் சீவன் சிவமாகும் இரகசியத்தை கூறும் யோக ஞானப்பாடல் என்பதை இந்த நூல் விரித்துரைக்கிறது. தமிழ்ச் சித்தர் மரபு ’உயிரே கடவுள், உடலே கோவில்’ என்ற உபதேசத்தினூடாக, எமக்குள் இறைவனைக் கண்டு பேரின்பம் பெறுவதையே வலியுறுத்தி வந்துள்ளது. ஒவ்வொருவருக்குள்ளும் உயிராகிய சிவம் புருவமத்தியில் இருந்து உடலை இயக்கி வருகிறது என்பதை, மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் உணர்த்தும் விதம் இந்த தியான அனுபவ விளக்கத்தில் துலக்கமாகிறது. யோக சாதகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட ஸ்ரீ ஸக்தி சுமனனின் ‘அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்’ ஐத் தொடர்ந்து யோகானுபவ விளக்க நூல் வரிசையில் அவரது இரண்டாவது படைப்பாக சிவ யோக ஞானத் திறவுகோல் தற்போது வெளிவருகிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சிவ யோக ஞானத்திறவுகோல் - Siva Yoga Gnyana Thiravukkol

  • ₹140
  • ₹119


Tags: siva, yoga, gnyana, thiravukkol, சிவ, யோக, ஞானத்திறவுகோல், -, Siva, Yoga, Gnyana, Thiravukkol, Sri Sakthi Sumanan,