சிவந்த கைகள் சுஜாதாவின் மாத நாவல் விளையாட்டுகளில் “சிவந்த கைகள்” ஒன்று. மணியன் மாத இதழில் பிரசுரமானது. ஒரு மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் காடர் போஸ்டில் வேலைக்கு நுழையும் இளைஞனொருவன் எளிதில் அடைய முடியாத அதன் உச்சபட்ச உயர் பதவி நோக்கி அதிர்ஷ்டவசமாக முன்னேறுகிறான். துரதிருஷ்டவசமாக அவன் மறைத்து வைத்திருக்கும் ஒரு சின்னக் களங்கம் அவனது லட்சியத்துக்கு முட்டுக்கட்டையாக வர நேரும்போது திடுக்கென அவன் தேர்ந்தெடுக்கும் வழிமுறை, செயல்பாடு, பிராயச்சித்தம் என சுனாமி வேக சுழல் கதை.
Tags: , சுஜாதா, சிவந்த, கைகள்-Sivantha, Kaikal