சொட்டாங்கல்’ விளையாட்டில் ஒருகல்லைத் தவறவிட்டாலும், தோற்றதாகத்தான் பொருள்.அதுபோலத்தான் வாழ்க்கையும். வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியாது. மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கவும் முடியாது. மாற்றமென்பது காலத்தின் கட்டாயம். தவிர்க்க முடியாதது. அது, ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திடவேண்டும். இன்றைய மாற்றம் அப்படியாக இல்லை. சமகாலத்தின் நிகழ்வுகள், எதிர்காலத்தை எதுவுமில்லாமல் சூனியமாக்கிவிடுமோ என்ற கவலையின் வடிவமே இந்தப்பதிவு.
வாழ்க்கையே அரசியல்தான். அரசியலின்றி எதுவும் இல்லை. மதுரையின் நிலவியல் வடிவத்தில் மட்டுமின்றி அதன் அகவய வாழ்வியலிலும் அரசியல் புகுந்து கொண்டிருப்பது உலகமயமாதலின் நீட்சிதான். நான் காணும் மதுரையில், ஒருபகுதியின் நிலவியலில் இப்பதிவு பயணித்தாலும், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கும் ஏன் இந்தியா முழுவதுக்குமே பொருந்திப் போகும் குறியீடாகத்தான் இருக்கின்றது. இதில், நீங்கள்கண்ட உங்கள் பகுதியும் பிரதிபலிக்கலாம்.
Tags: sottaangal, சொட்டாங்கல், எஸ். அர்ஷியா, எதிர், வெளியீடு,