பித்தமும் எதிர்வயமான உயர்ந்த அறிவு நிலையும் அம்பலத்துடன் ஆறு நாட்கள் கதையின் உள் அந்தரங்கத்தில் ரகசியமாக ஏற்படுத்தும் உக்ர விவாதம் கதையின் மேல் அமைப்பில் பல்வேறு நிகழ்வுகளாகவும் பாத்திரங்களாகவும் கதை அமைப்புக் கொள்கின்றன. இது ஓர் அசாத்திய சாதனை என்று தோன்றுகிறது. இந்தக் கதைக்கான தயாரிப்பு கடந்த முப்பது வருடங்கள் ஸ்ரீதரனுக்கு. - தமிழவன்
'இந்த ராமசாமி மனிதனாகக் கருதப்பட்டதற்குச் சரித்திரமில்லை. தேயிலைச் செடிக்குள் எல்லாமிருக்கும்' என்று நம்பிக் கடல் கடந்த சீவராசிகளின் சந்ததியில் வந்தவன் மனிதனாக முடியுமா? காட்டையழித்துப் பச்சைக் கம்பளம் போர்த்து, அதைப் பேணி உணவுப் பிச்சையளித்தவன் மனிதனாக முடியுமா? இதெல்லாம் ராமசாமிக்குச் சம்பந்த மில்லாத விஷயங்கள். இன்று இந்த மாங்குளத்துச் சந்தியில் வெய்யில் நெருப்பில் அதை வெல்கின்ற வயிற்று வெக்கையுடன் ‘மீனாச்சி', 'செவனு', 'மூக்கையா'வுடன் அலைந்து அவன் திரிவது ஒரு வெறும் பௌதிக நிலை. இதனால் இக்கணத்தில் இவன் மனிதனேயில்லை.'
- ‘ராமசாமி காவியம்'
'மனித சீவியம் எவ்வாறு இருக்க முடியாதென்றும் இருக்கக் கூடாதென்றும் பல மேதாவிகளும் நினைத்தும் வற்புறுத்தியும் இருக்கிறார்களோ அது இங்கே இந்தப் பொந்துகளில் இருக்கிறது. சேற்றில் புரள்கிற நாய்களும், அவற்றுடன் விளையாடித்திரிகிற சிறுவர்களும், சொற்களை வீசி அவற் றின் உரசலில் தங்களை இழக்கிற பெண்களும் நீரிலும் புகையிலும் அமிழ்ந்துபோன ஆண்களும், அழுக்கான அழுக் கும்... கர்த்தரே! இது நரகமாகத்தான் இருக்க வேண்டும். இது கொழும்பு மாநகரத்திலேதான் இருக்கிறதா?'
'சொர்க்கம்'
sreetharan kadaikal
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹750
Tags: sreetharan kadaikal, 750, காலச்சுவடு, பதிப்பகம்,