ஏன் வெற்றி தேவதை சிலருடைய வாசற்கதவுகளை மட்டும் தட்டிக் கொண்டிருக்கிறாள்? ஏன் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் மீண்டும் மீண்டும் மாபெரும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன? ஏனெனில், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழில்வாழ்க்கையிலும் சரி, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. ஏன் அதைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஸ்டீவ் ஜாப்ஸ், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், ரைட் சகோதரர்கள் ஆகியோருக்கு இடையே ஓர் ஒற்றுமை இருந்தது. அவர்கள் அனைவரும் ஏன் என்ற கேள்வியிலிருந்து துவக்கினர்.
பிறரை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கும் சரியான தலைவர்களை அடையாளம் காண ஆசைப்படுகின்றவர்களுக்கும் இந்நூல் உறுதுணையாக இருக்கும்.
Start With Why: How Great Leaders Inspire Everyone To Take Action