• சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை எழுதும் பொதுப்பிரிவினருக்கும் துறை சார்ந்தவர்களுக்கும் சேர்த்தே தயாரிக்கப்பட்டு இருக்கும் முதல் நூல் என்பது இந்த நூலின் சிறப்பம்சம். நாம் வெளியிட்டுள்ள பல போட்டித் தேர்வு நூல்களை எழுதியுள்ள டாக்டர் சரவணன் அவர்கள், இந்த நூலையும் அவரது குழுவோடு சேர்ந்து எழுதியுள்ளார். பொது அறிவியல், இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் வணிகம், இந்திய அரசமைப்பு, நடப்பு நிகழ்வுகள், உளவியல், காவல்துறை நிர்வாகம் மற்றும் சட்டங்கள் என்ற பகுதிகளாகப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள் நூல் ஆசிரியர்கள். துறை சார்ந்தவர்களுக்காக காவல்துறை அமைப்பு, காவல்துறை நிர்வாகம், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சான்றுச் சட்டம், இந்திய குற்ற நடைமுறைச் சட்டம் ஆகிய பகுதிகள் இடம் பெற்று இருப்பது கூடுதல் சிறப்பம்சம். பொதுப்பிரிவினருக்கான 2007 மற்றும் 2010-ம் ஆண்டு வினாத்தாள்களும், துறை சார்ந்தவர்களுக்கான 2010-ம் ஆண்டு வினாத்தாளும் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றின் விடைகளோடு விளக்கங்களையும் கொடுத்திருப்பது தேர்வர்களுக்கு அதிக பயன் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பயின்றவர்களுக்குப் பயன்படும் வகையில் இரு மொழிகளிலும் தேர்வு வினாக்கள் தரப்பட்டுள்ளதோடு சட்டப்பிரிவுகள் குறித்த குறிப்புகளும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தரப்பட்டுள்ளன. காவல்துறைப் பணியை லட்சியமாகக்கொண்ட பலருக்கும் காவல்துறை பற்றிய ஓர் அறிமுக நூலாகவும் காவல்துறை பணி சார்ந்த வேறு தேர்வுகளுக்கான கருவி நூலாகவும் இந்த நூல் பயன்படும் என்பது நிச்சயம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்

  • ₹350
  • ₹298


Tags: sub, inspector, thervu, kalanchiyam, சப், இன்ஸ்பெக்டர், தேர்வுக், களஞ்சியம், டாக்டர் சங்கர சரவணன், விகடன், பிரசுரம்