• சுதந்திர தாகம் (3 பாகங்கள்) - Suthanthira Thagam
1946 ஆகஸ்ட் 16ம் தேதி கல்கத்தாவில் நடந்த மதக் கலவரம்தான் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கே காரணமாக இருந்தது. இந்திய வரலாற்றிலேயே அதிபயங்கரமாக நடந்த அந்த மதக்கலவரத்தில் மூன்றே தினங்களில் 10000 பேர் கொல்லப்பட்டார்கள், ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளானார்கள். நடந்த படுகொலைகளும் கூட காட்டுமிராண்டித்தனாமாக நடந்தன. இப்படுகொலைகளின் சாட்சியாக இதுபோன்ற நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் இன்று வரலாற்றின் ஏடுகளில் புகை படிந்து கிடக்கின்றன. இதையெல்லாம் ஒரு மீள்பார்வைக்கு உட்படுத்த விரும்பினால் நாம் வாசிக்க வேண்டிய ஒரே எழுத்தாளர் சி.சு.செல்லப்பா தான் அவர் காலத்திய மற்ற எழுத்தாளர்கள் யாரும் இவ்வளவு நேரடியாக - ஏன் மறைமுகமாகவும் கூட சுதந்திரப் போராட்ட காலகட்டத்தின் அரசியலை எழுதியதில்லை இதனாலேயே சி.சி.செல்லப்பாவின் சுதந்திர தாகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. ஐந்து கல்லூரி மாணவர்கள், ஒரு பேராசிரியர், கல்லூரி முதல்வர் ஒருவர். பேராசிரியர் மற்றும் முதல்வரின் மனைவிகள். இவர்களை சுதந்திரப் போராட்டம் எவ்வாறு பாதித்தது என்பதுதான் “சுதந்திரதாகம்” நாவலின் கதை. போராட்ட நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு, தேசபக்தி உணர்வு தலைதூக்கும்போது, இவர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்ற கதை அன்றைய வரலாற்று சம்பவங்களின் பின்னணியில் சொல்லப்படுகிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சுதந்திர தாகம் (3 பாகங்கள்) - Suthanthira Thagam

  • ₹1,500


Tags: suthanthira, thagam, சுதந்திர, தாகம், (3, பாகங்கள்), -, Suthanthira, Thagam, சி.சு.செல்லப்பா, டிஸ்கவரி, புக், பேலஸ்