அழகு, இந்தப் பிரபஞ்சத்தின் அசைவு, இயற்கை, மனிதன், இலக்கியம் உள்ளிட்ட கலை வடிவங்கள் இதைச சொல்லுகின்றன. புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கு இந்த அழகு, தமிழிலக்கியச் சூழமைவைத் தெளிவாக்கி அதற்கு மலர்ச்சி தருகிறது. தமிழ் மரபில் பதிவாகியும் புலனாகியும் உயிர்த்துக்கிடக்கும் அழகியலை, சங்கப் பாடல்களை நோக்கிட்டு, ஒரு கோட்பாடாகத் தேடித்தருகிறது இந்த நூல். கவிதையெனும் மொழிசார் கலையின் வடிவமைப்பும் இயற்கைப் புலனறிவும் பெண் ஆண் உடல்மொழியும் கதை சொல்லியின் எடுத்துரைப்பும் நடையியலும் உள்ளிட்ட தமிழ் அழகியலின் பன்முகப்பட்டு ஒளிதரும் பரிமாணங்கள், இந்த நூலின் பக்கங்களில் மலர்ச்சி கொண்டுள்ளன.
Tamizh Azhagiyal
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹240
Tags: Tamizh Azhagiyal, 240, காலச்சுவடு, பதிப்பகம்,