மொழி ஒரு சமூகத்தின் உற்பத்திப் பொருள். எனவே, சமூக அரசியல் நிலைகளில் அதன் தகுதி குறித்த பிரச்சனைகளுக்கு உள்ளாவது, பொருளாதார அடுக்குகளில் சாதிய, வட்டார வேறுபாடுகளைப் புலப்படுத்தி நிற்பது, கல்வித்துறையில் உரிய பங்கைப் போராடிப் பெறுவது, புலம்பெயர்ந்த நாடுகளில் இன அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள மல்லாடுவது, மொழி அழிவை எதிர்கொள்வது என அனைத்தும் அரசியல் அதிகாரத்திற்கு உட்பட்டவை. 'காலச்சுவடு', கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தமிழகத்திலும் அயல்நாடுகளிலுமாகப் பல்வேறு தளங்களில் நிலவும் தமிழ்மொழி அரசியலை விவாதிக்கக் களம் அமைத்துத் தந்துள்ளது. இக்களத்தில் சமூக மொழியியற் புல அறிவு மிகுந்த சிந்தனையாளர்களால் எழுதி விவாதிக்கப்பட்ட 44 கட்டுரைகளின் தொகுப்பு இது.
Tamizmozhi Arasiyal
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹350
Tags: Tamizmozhi Arasiyal, 350, காலச்சுவடு, பதிப்பகம்,