பொதுக்கல்வி, சமச்சீர் கல்வி, தமிழ்வழிக் கல்வி, ஆங்கிலவழிக் கல்வி, மொழிப் பாடத்திட்டமும் பாடநூல்களும், மொழி கற்பித்தல், தேர்வுமுறை, அயலகத் தமிழ்க் கல்வியும் ஆய்வும் என விசிறிவாழையாய் விரியும் தலைப்புகளின்கீழ்த் தமிழகத்தின் இருபத்தியிரண்டு கல்வி ஆளுமைகள் திறக்கும் கருத்துப் பெட்டகம் இத்தொகுப்பு. கடந்த இரு பத்தாண்டுக் காலத் தமிழ்மொழிக் கல்வி வளர்ச்சியை உலக வாசகர்களுக்குக் கவனப்படுத்தும் 'காலச்சுவ’டின் இத்தொகுப்பில் மொழிக்கல்வியாளர்கள் விவாதிக்க மறுக்கின்ற மறுபக்கங்கள் நுணுக்கமாகச் சாடப்படுகின்றன. அறிவாராய்ச்சி அறுவை சிகிச்சைக்குப் பின் உட்கொள்ள வேண்டிய பத்திய உணவுக் குறிப்புகள் அடங்கிய இந்நூல் தமிழ்மொழிக் கல்வியின் மறுவாழ்வுக்கு நலம் பயக்கும் பனுவல்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Tamizmozhi Kalvi

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹190


Tags: Tamizmozhi Kalvi, 190, காலச்சுவடு, பதிப்பகம்,