• தடையேதுமில்லை-Thadaiyedhumillai
புத்தகங்களை மட்டுமே படித்துவிட்டு எவரும் வெற்றியாளர் ஆகிவிடமுடியாது.வாழ்க்கையைவிடச் சிறந்த வாத்தியார் இந்த உலகில் இல்லை. எனவே அனுபவங்களிலிருந்தும் ஒருவர் கற்கவேண்டியிருக்கிறது.ஆனால் அது அத்தனை சுலபமல்ல. எடுத்தோமா, படித்தோமா என்று கற்றுக்கொண்டுவிடமுடியாது. அனுபவத்தைப் புரிந்துகொள்ளவும் அதிலிருந்து முக்கியமான பாடங்களைக் கண்டுபிடித்து கிரகித்துக்கொள்ளவும் தனித்திறன் தேவைப்படுகிறது. திறந்த மனமும் தெளிவான சிந்தனையும் இருந்தால்தான் அனுபவப் பாடம் படிக்கமுடியும்.சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் நம் வாழ்வை நாமே படித்துக்கொள்ள உதவும் ஒரு கைவிளக்காக இருக்கிறது. நம்மை முன்னேறவிடாமல் தடுக்கும் தடைக்கற்கள் எவையெவை என்பதை மிகத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தடைகளைத் தகர்த்து வெற்றிப் படிகளில் ஏறி உச்சத்தைத் தொட இந்தப் புத்தகம் உங்களுக்கு நிச்சயம் உதவும்.‘வாசகர்களின் தோளில் கைபோட்டுப் பேசும் திறன் கொண்ட புத்தகம் இது. கடினமான விஷயங்களை மிக எளிமையாக எடுத்துச் சொல்லும் சோம. வள்ளியப்பனின் பாணி அபூர்வமானது.’ – பா.ராகவன்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

தடையேதுமில்லை-Thadaiyedhumillai

  • ₹175


Tags: , சோம. வள்ளியப்பன், தடையேதுமில்லை-Thadaiyedhumillai