அகதிகளின் வெளியேற்றம், நவீன அடிமை முறை, ஆட்சி மாற்றம், வீடுகள், மதங்கள், சாதிகள், முகாம்கள், பலிகள், ஆயுத உற்பத்தி, புலம்பெயர் சமூகங்களுக்கிடையே நிலவும் தராதரம், சட்டமும் நடைமுறைச் சிக்கல்களும் என சமகால அகதி அரசியல் குறித்த பதின்மூன்று கட்டுரைகளும் முகாம்வாழ் பெண் ஒருவரின் வாக்குமூலமும் மூத்த புலி உறுப்பினர் ஒருவரின் நேர்காணலும் கொண்டது இத்தொகுப்பு. உலகளவில் போர்களைக் குறித்து உள்ளும் புறமுமான ஆய்வுகளும் சாட்சியப் பதிவுகளும் வாக்குமூலங்களும் வெளியாகியிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக இந்துமாக் கடற்கரைகளில் தனித்து விடப்பட்ட மக்களைக் குறித்தும் அவர்களின் துயர் குறித்தும், கால்நூற்றாண்டு காலம் விளிம்புநிலைக்கு உட்படுத்தப்பட்டுக் கவனிப்பாரற்று பத்துக்குப்பத்து கொட்டாய்களில் அடைக்கப்பட்ட வாழ்வு குறித்தும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர் பத்தினாதன். தொகுப்பில் அச்சேற்றப்பட்டுள்ள கட்டுரைகள் அதை வழிமொழிவனவாகவும் வண்ணப்பூச்சுகளற்ற எழுத்துக்களாயும் உள்ளன. விளிம்புநிலை வாழ்வு குறித்த வாசிப்பின் தேவையை வேண்டி நிற்கும் காலத்தில் இவ்வெழுத்துக்கள் வெளியாகின்றன. இது இவரது நான்காவது தொகுப்பு.
Thakippin Vaazhvu
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹120
Tags: Thakippin Vaazhvu, 120, காலச்சுவடு, பதிப்பகம்,