• Thamizhnattu Porkalangal /தமிழ்நாட்டுப் போர்க்களங்கள்
பண்டைய காலம் முதல் நவீன காலம் வரையிலான தமிழகத்தின் கதையைப் போர்களின்மூலம் தெரிந்துகொள்ள உதவும் ஒரு வரலாற்று வழிகாட்டி இந்நூல். தலையாலங்கானம், தகடூர், மதுரை, நெல்வேலி, காந்தளூர்ச் சாலை, பெருவளநல்லூர், திருப்புறம்பியம் என்று அடுத்தடுத்து பல போர்க்களங்கள் நம் முன்னால் விரிகின்றன. நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் நெடுஞ்செழியனும் புலகேசியும் சுந்தரபாண்டியனும் வாளேந்தி பாய்கிறார்கள். யானைகளும் குதிரைகளும் மனிதர்களும் மோதிக்கொள்கிறார்கள். குருதி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரு மன்னர் தோற்கிறார், இன்னொருவர் வெல்கிறார். இந்த வெற்றிகளும் தோல்விகளும் தமிழகத்தின் திசைப்போக்கைத் தீர்மானித்திருக்கின்றன. எனவே போர்களைக் கூடுதல் கவனத்துடன் ஆராயவேண்டியிருக்கிறது. இந்நூலில்புறநானூறு,அகநானூறு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை என்று இலக்கிய ஆதாரங்கள் ஒரு பக்கம் அணிவகுக்கின்றன என்றால் கல்வெட்டுகள், செப்பேடுகள் என்று வரலாற்றுத் தரவுகள் இன்னொரு பக்கம் பலம் சேர்க்கின்றன. சங்க காலம் தொடங்கி ஐரோப்பியரின் வருகைக்குச் சற்று முன்பு வரையிலான போர்க்களங்களை நம் கண் முன்னால் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் எஸ். கிருஷ்ணன்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Thamizhnattu Porkalangal /தமிழ்நாட்டுப் போர்க்களங்கள்

  • ₹200


Tags: , S. Krishnan /எஸ். கிருஷ்ணன், Thamizhnattu, Porkalangal, /தமிழ்நாட்டுப், போர்க்களங்கள்