• தங்கப்புத்தகம் - Thanga Puthagam
இவை பெரும்பாலும் திபெத்தில் நிகழும் கதைகள். திபெத் ஒரு தங்கப்புத்தகம். வாசிக்க வாசிக்க விரிவது, வாசிப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் அளிப்பது. மானுடத்தில் இருந்து தனித்து ஒதுங்கி நின்றிருந்த ஒரு பண்பாடு அது. நித்ய சைதன்ய யதி ஒருமுறை சொன்னதுபோல ‘கெட்டுப்போகாமலிருக்க குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்பட்ட பண்பாடு.’ மானுடம் இழந்தவை பல அங்கே சேமிக்கப்பட்டிருந்தன. ஆகவேதான் திபெத் அத்தனை மர்மமான கவர்ச்சி கொண்டதாக இருக்கிறது. மீளமீள மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகிறது. இந்தக்கதைகள் திபெத்தை ஒரு கதைக்களமாக கொண்டவை என்பதைக் காட்டிலும் ஒருவகை குறியீட்டு வெளியாகக் கொண்டவை என்று சொல்வதே பொருத்தமானது. கனவில் எல்லாமே குறியீடுகள். ஒரு கனவுநிலமாகவே இதில் திபெத் வருகிறது. இது மெய்யான திபெத் அல்ல. இது நிக்கோலஸ் ரோரிச் தன். ஓவியங்களில் சித்தரித்த திபெத். ஆழ்படிமங்கள் வேர்க்கிழங்காக உறங்கும் நிலம். அத்தனை பொருட்களும் குறியீடுகளாக முளைத்தெழும் மண். இந்தக்கதைகளில் ஒருகதையில் இருந்து இன்னொரு கதைக்கு நீண்டுசென்று வலுப்பெறும் ஒரு மெய்த்தேடல் உள்ளது. ஆகவே ஒவ்வொரு கதையும் இன்னொன்றால் நிரப்பப்படுகிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

தங்கப்புத்தகம் - Thanga Puthagam

  • Brand: ஜெயமோகன்
  • Product Code: விஷ்ணுபுரம் பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹330


Tags: thanga, puthagam, தங்கப்புத்தகம், -, Thanga, Puthagam, ஜெயமோகன், விஷ்ணுபுரம், பதிப்பகம்