அன்புள்ள திரு. பாலகுமாரன் அவர்களுக்கு,
வணக்கம்,
தங்கள் 'தங்கக்கை' படித்தேன். அளவிலா திருப்தி அடைந்தேன். தங்கள் அறிவாற்றலுக்கு இந்த வரலாறு மற்றொரு சான்று.
'தங்கக்கை' எழுதிய தங்கள் கையை கண்களிலே ஒற்றிக்கொள்ள ஆசை. அது நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தாங்கள் எழுதும் நாவல்களில் கதைப் போக்கிலேயே சென்று, அந்த கால கட்டத்தில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை அணு அணுவாக செதுக்கிப் பலருக்குத் தெரியாத விஷயங்களை வெளிப்படுத்துவது தங்களுக்கு 'கை' வந்த கலை. இந்தத் 'தங்கக்கையும்' அதற்கு விதிவிலக்கு அல்ல.
Tags: thangakkai, தங்கக்கை-Thangakkai, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்