ஹோசே அர்க்காதியோ புயேந்தியா ஒரு புதிய உலகை நிர்மாணிக்கிறார். சதுப்பு நிலப் பகுதியில் உருவாகும் மகோந்தா கிராமம் நூற்றாண்டுகளினூடே வளர்ந்து நகரமாக மாறுகிறது. புயேந்தியாவின் வம்சத்தைச் சேர்ந்த ஏழு தலைமுறைகள் அந்த நகரத்தின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் அழிவுக்கும் மையமாகவும் விரிவாகவும் அமைகின்றன. உறக்கமின்மைக் கொள்ளை நோயும் உள்நாட்டுப் போர்களும் பழிவாங்கல்களும் அந்த நகரத்தின் வரலாற்றை உருவாக்குகின்றன. உலகின் மிகப் பெரிய வைரம் என்று ஹோசே அர்க்காதியோ புயேந்தியாவால் வர்ணிக்கப்படும் பனிக்கட்டியைப்போல மகோந்தா நகரமும் காலத்தின் வெம்மையில் கரைந்து மறைகிறது. ஒரு நகரத்தின் நூறு ஆண்டுத் தனிமையையும் ஒரு மக்கள் கூட்டத்தின் தனிமையான நூறு ஆண்டுகளையும் சொல்லுகிறது இந்த நாவல். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல். இன்றும் புதிய வாசகர்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் காலத்தை மீறிய படைப்பு. எந்த மொழியில் பெயர்க்கப்பட்டாலும் அந்த மொழியைத் தாண்டி நிலைத்திருக்கும் மானுடக் கதையாடல். One Hundred Years of Solitude, is a novel by Columbian author Gabriel García Márquez that tells the multi-generational story of the Buendía family. The widely acclaimed book, considered by many to be the author's masterpiece, was first published in Spanish in 1967, and subsequently has been translated into thirty-seven languages and has sold more than 20 million copies.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Thanimaiyin Nooru Aandukal தனிமையின் நூறு ஆண்டுகள்

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹450


Tags: Thanimaiyin Nooru Aandukal தனிமையின் நூறு ஆண்டுகள், 450, காலச்சுவடு, பதிப்பகம்,