தி.பரமேஸ்வரியின் இந்தக் கவிதைகள் பெரும்பாலும் நேரடியானவை. பாசாங்கற்ற மொழியில் மனதின் நுட்பமான உணர்வுகளைப் பேசி செல்பவை.கவிதைகளின் ஆழத்தில் நிகழும் மெல்லிய நடனத்தை பளிங்கின் உள்நீரோட்டம் வெளித்தெரிவதுபோல் காட்டும் இயல்புடையவை. கலைடாஸ்கோப்பில் உருமாறிக்கொண்டே இருக்கும்
பலவித காட்சிகள்; பலவித வண்ணங்கள் போல் பல்வேறு உணர்வுகளைக்
கிளர்த்தும் பாலிபோனிக் (Polyphonic) கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. விலகிச் செல்லும் உறவுகளின் துயரம் நிறைந்த தருணங்களையும்
அதிலிருந்து விலக முடியாத மனதின் வாதைகளைப் பற்றிப் பேசும் கவிதைகளும் உள்ளன. அன்பின் நெகிழ்வான தருணங்களைப் பேசும் கவிதைகளும் உள்ளன. பால் கடந்த மானுட இருப்பாய் தனை உணரும் கவிதைகளும் உள்ளன. மரபு இலக்கியங்களில் கவிஞருக்கு உள்ள தேர்ச்சியும் ஆர்வமும் இந்தக் கவிதைகளில் பிரதிபலிகின்றன
Tags: thaniyal, தனியள், தி. பரமேஸ்வரி, வானவில், புத்தகாலயம்