முன்னுரை பகவான் ஸ்ரீ ரஜனீஷ் ஓர் உயர்ந்த வழிகாட்டி. தெரியாத பெரு வழியில் நமக்குத் தெளிவு தருபவர் பாதையில் மலைகளும், பள்ளத்தாக்குகளும், காடுகளும், ஆறுகளும் ஒளியும் இருட்டும் நிறைந்த பாதையில் நமக்குத் தெளிவு தருகிறார்.சிலர் பாதையில் தைரியமாகப் பயணம் செய்திருக் கிறார்கள். அவர்கள் கூறுவது இதயத்திற்கு இதம் அளிக்கிறது. பயணத்தின் அற்புத மெளனம், அழகு, மகிழ்ச்சி ஆகியவை பற்றி அவர்கள் கூறுவது. வார்த்தைக்கு அப்பாற்பட்டது. திலோபா இவ்வழியில் பயணம் செய்திருக்கிறார்; அதில் பாடலால் நிரப்பினார். அவர் நிரம்பி வழிந்தார். அவரது மாணவர் நரோபா தயாராக இருந்தபோது தமது இறுதி அனுபவத்தை மகாமுத்திரைப் பாடலாக வெளிப்படுத்தினார்,ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் பகவான் ரஜனீஷ், திலோபாவின் பாடலைப் பாடி, பாதையில் மறுபடியும் ஒளியேற்றுகிறார். தந்த்ரா மார்க்கத்தின் செய்தியை, தமது ஒப்பற்ற ஞானத்தால் அன்போடு உலகிற்கு வெளிப்படுத்துகிறார். உரிய காலத்தில் - வெயில் நாளில் மழைபோல் - செய்தி வெளிப் படுகிறது, பகவான் என்பவர் ஊற்று; தந்த்ரா என்பது ஆறுதலளிக்கும் தண்ணீர், கடுமையான முயற்சியை எதிர்பார்க்கும்போது, 'இயல்பாக நெகிழ்ச்சியோடு இருங்கள்' என்பது வழியாகிறது. கடுமையான தேடலை எதிர்பார்க்கும்போது, 'தேடினால் கிடைக்காது' என்பதே பதில்.மறுப்பும், கட்டுப்பாடும் சமயங்களின் உபதேசப் பொருளாக இருக்க, தந்த்ரா மார்க்கத்தின் செய்தியோ, முழுவதும் ஏற்றல் என்பதா கிறது. அப்பும்-ஓய்வும், விழிப்பும்-ஏற்றலும் கொண்ட வழி இது.பகவான் நமக்குத் தரும் இக்கொடை 'ஆழமாகப் புரிந்து கொள்ளுதலை' விளக்குகிறது. அவரது ஒளியும் சிரிப்பும், நம் இறுதிப் பயணமாம் உள்நோக்கிச் செல்லும் பயணத்தில் நம்மை ஊக்கப்படுத்தும்.
தந்த்ரா ஓர் உன்னத ஞானம்-Thantra Oru Unnatha Gnanam
- Brand: ஓஷோ
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹200
Tags: thantra, oru, unnatha, gnanam, தந்த்ரா, ஓர், உன்னத, ஞானம்-Thantra, Oru, Unnatha, Gnanam, ஓஷோ, கவிதா, வெளியீடு