பொழுதுபோக்கு அம்சங்கள் ஒருபுறமிருக்க, சமுதாயத்தில் ஒரு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் மகாவலிமையும் சினிமாவுக்கு உண்டு. இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம், அமீர்கானின் தாரே ஜமீன் பர் இந்திப் படம். இது வெளியாவதற்கு முன்பு வரையில் அதிகம் அறியப்படாத ஒன்றாகவே டிஸ்லெக்ஸியா இருந்தது. ஒரு சில குழந்தைகளிடம் காணப்படும் இந்தவிதக் குறைபாடுகள் பற்றி இப்போது அனைத்து தரப்பினரும் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இது குறித்து நிறையவே விவாதங்களும் நடைபெறுகின்றன. அங்கும் இங்குமாக குழந்தைகளிடம் ஏற்படக்கூடிய டிஸ்லெக்ஸியா பாதிப்பு குறித்து அலசி, ஆராய்ந்து எழுதப் பட்டிருக்கும் நூல் தரையில் நட்சத்திரங்கள். இதற்காக பல்வேறு புத்தகங்களைப் படித்தும், மருத்துவர்களைச் சந்தித்தும் இதனை எளிமையான நடையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ரவிபிரகாஷ். குழந்தைப் பருவத்தில் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டு பின்னர் வாழ்க்கையின் உயரத்தைத் தொட்டு சாதனை படைத்திருக்கும் பலரையும் சந்தித்து, அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தமிழ் வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான எழுத்தாளர் அனுராதா ரமணன், தமது சிறு வயதில் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர் என்பதைக் குறிப்பிட்டு, அந்தப் பாதிப்பிலிருந்து அவர் மீண்டுவந்த விவரங்களை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, டிஸ்லெக்ஸிக் குழந்தைகளுக்கு பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் எந்த அளவுக்கு அவசியமானது என்பதையும், ஆசிரியர்களின் நேரடியான கண்காணிப்பு இவ்வித குழந்தைகளின் அணுகுமுறையை எந்த அளவுக்கு மாற்றுகிறது என்பதையும் துல்லியமாக வலியுறுத்துகிறார் நூலாசிரியர். இந்த நூலைப் படித்தால் டிஸ்லெக்ஸியா என்பது ஒரு நோய் அல்ல என்பது தெளிவாக விளங்கும்; இந்த பாதிப்பு இருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக மாற்றிவிடக்கூடிய வித்தை புரியும்.
தரையில் நட்சத்திரங்கள்
- Brand: ரவிபிரகாஷ்
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹45
-
₹38
Tags: tharaiyil, natchathirangal, தரையில், நட்சத்திரங்கள், ரவிபிரகாஷ், விகடன், பிரசுரம்