• திசைகள் அசைவதில்லை நாடகம்  - Thasaigal Asaivathillai Nadagam
சமூக மாற்றங்களை தெறிக்கும் (சுநகடநஉவ) ஒரு ஊடகமாகவே அரங்கு மனித வரலாற்றில் பதிவாகி வந்திருக்கிறது. சேக்ஸ்பியர், ஹென்றிக்கிப்சன், அன்ரன் செக்கொவ , பெணாட்ஸா என உலகின் தலைசிறந்த நாடக ஆசிரியர்கள் பலரின் நாடகங்களும் இதற்கு சான்றாகியுள்ளன. ஈழத்திலும் எமது மக்களின் கற்பனை ஆற்றலையும், கவித்துவத்திறனையும், இசை வளத்தையும், சமூகம் மற்றும் சமயம் சார்ந்த விருப்பு வெறுப்புக்களையும் படம் பிடித்துக் காட்டும் சாதனமாக விளங்கியது நாடகங்களே. பள்ளு, குறவஞ்சி, அம்மானை போன்ற இலக்கிய வடிவங்களின் ஊற்றுக் கண்களாக நாடகங்களே விளங்கின. கைத்தொழில் புரட்சியின் விளைவாக விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி (ஊiநெஅயவழபசயிhல) எனும் புதிய சலனப்படக் கலைக்கு வழி திறந்ததோடு, நாடகம் கிராமப்புற பாமர மக்களின் கலை வடிவமாக மட்டுப்படுத்தப்பட்டது. எனினும் 1956களில் எழுந்த இலங்கை தேசிய எழுச்சிகளுடனான போக்கில் பேராசிரியர் சரத்சந்திரவின் 'மனமே' 'சிங்கபாகு' போன்றவை சிங்கள தேசிய அரங்குகளாக பரிணமித்தபோது பேராசிரியர் வித்தியானந்தனின் முயற்சியினால் தமிழ்ப்பாரம்பரிய நாடக அரங்கங்களும் புதிய வடிவங்களைப் பெற்று புத்துயிர் பெற்றன. 'இராவணேசன்' என்னும் நாடகம் இவ வாறு உருவாகிய நாடகமாகும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

திசைகள் அசைவதில்லை நாடகம் - Thasaigal Asaivathillai Nadagam

  • ₹30


Tags: thasaigal, asaivathillai, nadagam, திசைகள், அசைவதில்லை, நாடகம், , -, Thasaigal, Asaivathillai, Nadagam, கப்பல் கவிஞர் கி. கிருஷ்ணமூர்த்தி, சீதை, பதிப்பகம்