ஒவ்வொரு இந்தியனின் மரபணுவின் அடித்தளத்திலேயே மக்களாட்சி உணர்வு
இருக்கிறது. நமது நனவு நிலைக்கு உரித்தானது அது. நமது உரையாடல்களுக்கு அது
உயிரூட்டுகிறது, நமது மனங்களை ஊக்குவிக்கிறது; நம்மிடமுள்ள சிறந்தவற்றை
வெளிக்கொண்டு வருகிறது. சில வேளைகளில் மோசமானவற்றையும் கூட. எவ்வளவுக்கு
எவ்வளவு நாம் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறோமோ, எவ்வளவுக்கு எவ்வளவு
நாம் ஏழைகளாக இருக்கிறோமோ, எவ்வளவுக்கு எவ்வளவு நாம்
அந்நியப்படுத்தப்படுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நாம் பங்கு கொள்கிறோம்;
நமது நாட்டின் தேர்தல்களையும் மக்களாட்சியையும் பாதுகாக்கிறோம். மக்களாட்சி
மேல் தாக்குதல் நடத்தப்படும் ஒவ்வொரு முறையும், இந்திய வாக்காளர் தேர்தல்
நேரத்தில் திரும்பத் தாக்குகிறார். இந்தியத் தேர்தல்களின் வரலாறு
விடுதலையின் வெற்றிக் கதை. மக்களாட்சிக் கருத்தியல் என்பது நமது
வாக்காளர்களின் மரபணுவில் இருக்கும் அதே வேளையில், நமது மக்களாட்சியின்
உட்கூறாக நமது வாக்காளர்தான் இருக்கிறார், அரசியல்வாதியல்ல.
தீர்ப்பு (இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்)
- Brand: ச. வின்சென்ட், பிரணாய் ராய்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹399
Tags: theerpu, தீர்ப்பு, (இந்தியத், தேர்தல்களைப், புரிந்து, கொள்ளல்), ச. வின்சென்ட், பிரணாய் ராய், எதிர், வெளியீடு,