உலகில் உள்ள கண்டங்கள் எண்ணிக்கைக்கு உட்பட்டவை. ஆனால் தீவுகள் அப்படியல்ல.ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் ஒரு தனித்தீவு. எல்லைகளற்ற மனப்பெருவெளியில் அடிக்கிற புயல்களும் விழுகிற மரங்களும் கணக்குகளுக்கு உட்படாமல் காலத்தின் மடியில் அடைக்கலமாகின்றன.இந்திரா பார்த்தசாரதி ஒரு தேர்ந்த மனத்தத்துவ நிபுணரின் லாகவத்தில் இந்த மனத்தீவுகளில் புரியும் ஆய்வுகள் முற்றிலும் வினோதமாகத் தோன்றலாம்; ஆனால் அத்தனையும் இயல்பானவை.இயல்புகள் வினோதமானவையாகிவிட்ட காலத்தில் இ.பா. போன்ற ஆய்வாளர்களின் தேவையும் அவசியமாகிவிடுகிறது.தீவுகள், இ.பாவின் முக்கியமான நாவல்களுள் ஒன்று. ஓர் இடைவெளிக்குப் பிறகு இப்போது மறுபிரசுரம் காண்கிறது.Everyman is an island. The raging storms and his sufferings are soothed by Time
Tags: , இந்திரா பார்த்தசாரதி, தீவுகள்-Theevugal