குமரி மாவட்டத்தில் கேரள எல்லையையொட்டிய ‘திருத்துவபுரம்’ இவரது ஊர். தமிழ்த் திரைத்துறையில் இணை இயக்குநராக பணியாற்றுகிறார். ‘நடுங்கும் கடவுளின் கரங்களிலிருந்து’, ‘மேக்தலினா’ இவரது முந்தைய நூல்கள். 1970 வரை குமரி மக்களின் வாழ்வின் - அந்தஸ்தின் அடையாளமாக இருந்த ‘தென்னையை’ வெட்டி வீழ்த்திவிட்டு ‘ரப்பர்’ வேரூன்ற தொடங்கியது. ‘தென்னை உணவுப் பயிர் - ரப்பர் பணப்பயிர்’, ஒன்றின் வாழ்விடத்தை வெறொன்று ஆக்கிரமிக்கும்போது நிகழும் ஊசலாட்டம் - சம்மனசிற்கும் சாத்தானுக்குமிடையெ தொடங்கும் பெண்டுலகமாக ‘நாராயணன் கப்பள்ளியி’யின் மனதில் தொடங்குகிறது.கப்பள்ளி குமரியின் மனசாட்சி. எளிய மனிதர்களின் சொல்லப்படாத துக்கங்களும், ஆற்றுப்படுத்தப்படாத கேவல்களும் கதைகளாக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கதைகள் அதன் மொழியிலேயே பதிவாகியிருக்கிறது. குமரி மண்ணின் பேச்சு வழக்கில் தென்னை பூ வாசமும் மரவள்ளி கிழங்கின் சுவையும் கலந்து கட்டி அடிக்கிறது. நவீன சிறுகதையின் பரப்பை,முற்றிலும் புதியதொரு புனைவின் தளத்திற்கு அழைத்து சென்றிருப்பதே இத்தொகுப்பின் தனிச்சிறப்பு. - கவிஞர் நரன்
Tags: thengu, தெங்கு, -, Thengu, பின்னி மோசஸ், டிஸ்கவரி, புக், பேலஸ்