‘வீட்டைக் கட்டிப்பார்... கல்யாணம் பண்ணிப்பார்...’ என்ற முதுமொழிக்கு ஏற்ப வீட்டைக் கட்டி, அதில் குடிபுகுவது என்பது இருபத்தோராம் நூற்றாண்டில் பலருக்கு வாழ்நாள் கனவாகிவிட்டது.
வாடகை வீட்டில் வாழ்ந்த அனுபவத்தோடு ஒருவர் சொந்த வீட்டில் வாழ்கிறார் என்றால் அவருக்கு அதுவே என்றைக்கும் சொர்க்கமாக இருக்கும். ஆம், ஒரு வீடு வாங்கும்போது அடைகிற மகிழ்ச்சியே அளவற்றது. அப்படியே நம் கற்பனைக் குதிரையை ஓடவிட்டு, வீட்டைக் கட்டும்போது எந்தவித வில்லங்கமும் இல்லாத நிலத்தில்தான் நாம் கட்டுகிறோமா என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும். வாங்குகிற வீடாக இருந்தால், நமக்குத் தேவையான வசதிகளோடு அந்த வீடு அமைந்திருக்கிறதா என்பதையும் சட்டப் பிரச்னைகள் இருக்கிறதா என்பதையும் பார்த்துத்தான் அந்த வீட்டை வாங்கவேண்டும்.
வீடு வாங்குவதிலும் கட்டுவதிலும் அனுபவம் எல்லோருக்கும் இருக்காது. அதனால், விற்பனைப் பிரதிநிதிகள் மூலம் நிலம் வாங்க சிலர் நினைப்பார்கள். அப்படி வாங்கும்முன் தெரிந்துகொள்ள வேண்டிய வழிமுறைகள் என்னென்ன..? அதில் இருக்கக்கூடிய சட்டச் சிக்கல்களை எப்படிக் களைவது..? விற்பனைப் பிரதிநிதிகளிடம் எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்? என்பது போன்ற கேள்விகளுக்கு பல்வேறு தகவல்களை விளக்கி எழுதியிருக்கிறார் வழக்கறிஞர் த.இராமலிங்கம்.
இது வீடு வாங்குபவர்களுக்கு மட்டுமல்ல. விற்பவர்களுக்கும்தான். ஒரு நிலத்தை விற்கும்போது கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? அடுக்குமாடி குடியிருப்புகளை எப்படி வாங்குவது? ஒரு நிறுவனத்தின் சொத்தை விற்பவர் _ வாங்குபவர் பின்பற்ற வேண்டிய முறைகள் என்ன? அரசு குடியிருப்புகளை எப்படி வாங்குவது? உள்ளிட்ட பல கேள்விகளுக்கும் இந்நூல் தெளிவாக நுணுக்கமாக விளக்கம் தருகிறது.
அசையா சொத்து வாங்கும்போது பார்க்கவேண்டிய ஆவணங்கள் என்னென்ன என்பதை நூலாசிரியர் விளக்கும்போது, சொத்து வாங்க நினைப்பவர்கள் கொண்டிருக்கும் பயம் மெல்லமெல்ல பனி போல விலகும். இந்நூல், உங்கள் பரம்பரைக்கும் அத்தியாவசியமாக இருக்கும் என்பதற்கு தமிழில் கொடுக்கப்பட்டுள்ள சட்டச் சொற்களே ஒரு உதாரணம். இதைப் படிக்கும் நீங்கள், கட்டப்போகும் வீட்டின் நூலக அலமாரியில் பாதுகாத்து வைக்கப்போகிறீர்கள் என்பது மட்டும் உறுதி.
தைரியமாக சொத்து வாங்குங்கள்
- Brand: வழக்கறிஞர்.த. இராமலிங்கம்
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹60
-
₹51
Tags: theyiriyamaga, sothu, vaangungal, தைரியமாக, சொத்து, வாங்குங்கள், வழக்கறிஞர்.த. இராமலிங்கம், விகடன், பிரசுரம்