கிருஷ்ணப்ப நாயக்கனுக்குப் பின் விசயநகர மன்னனாகிய சீரங்கராயன் - III கி.பி. 1643-இல் தில்லைகோவிந்தராசர் சந்நிதியை மேலும் விரிவுபடுத்த எண்ணி முன்பு இல்லாத புண்டரீகவல்லித்தாயார் சந்நிதி முதலிய புதிய சந்நிதிகளையும் தில்லைக்கோயிலில் அமைத்தான். இவர்களுடைய மதவெறி காரணமாகத் தில்லைநடராசர் கோயிலிற் பழைமையாக இருந்த சிவசந்நிதிகள் இடிக்கப்பட்டு மறைந்துபோயின. இவ்வாறு வைஷ்ணவர்கள் கொஞ்சங் கொஞ்சமாகத் தில்லைக்கோயிலின் பெரும்பகுதியைத் தமக்கு உரிமையாக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவாராயினர். அதனையுணர்ந்த தில்லைநகரச் சைவப் பெருமக்களும் தில்லைவாழந்தணர்களும் கொதித்தெழுந்து தில்லைக்கோயிலில் கோவிந்தராசப்பெருமாளுக்கு னின் இடமில்லையென்று கூறும் அளவுக்கு பெருமாள் சந்நிதியையே அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவாராயினர். அந்நிலையில் கோவிந்தராசப்பெருமாள் பூசை முறையினைக் கண்காணிக்கும் உரிமையுடைய வைஷ்ணவர்கள் கி.பி. 1862 இல் தில்லைப் பெருங்கோயில் பூசை முறை உரிமையாளராகிய தில்லைவாழந்தணர்களோடு ஓர் உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டிய இன்றியமையாமை உண்டாயிற்று. சிதம்பரம் கோவிந்தராசப்பெருமாள் பூசை முறையைக் கவனிக்கும் உரிமையுடைய வைஷ்ணவர்கள் தில்லைவாழந்தணர்கட்கு எழுதிக் கொடுத்த உடன்படிக்கையில் தாங்கள் கோவிந்தராசப் பெருமாளுக்குச் செய்து வரும் நித்தியபூசைகளைத் தவிர வேறு பிரமோற்சவம் நடத்துவதில்லையெனவும், தில்லையில் நடராசப்பெருமானுக்குத் தொன்று தொட்டு நடைபெற்றுவரும் நித்திய பூசைகளிலும் திருவிழாக்களிலும் தாம் தடையாக இருப்பதில்லையெனவும் ஒப்புக்கொண்டு உறுதி கூறியுள்ளார்கள். இவ்வுறுதியின் பேரில் கி.பி. 1867 இல் நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது.
தில்லைப் பெருங்கோயில் வரலாறு - Thillai Perunkovil Varallaru
- Brand: வித்துவான் க. வெள்ளைவாரணன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹80
Tags: thillai, perunkovil, varallaru, தில்லைப், பெருங்கோயில், வரலாறு, , -, Thillai, Perunkovil, Varallaru, வித்துவான் க. வெள்ளைவாரணன், சீதை, பதிப்பகம்