இருப்பை மலர் போன்ற மெல்லிய தலையையுடைய இறாமீன்களையும், கூட்டமாய் சுற்றித்திரியும் மற்ற மீன்களையும், ஈர்வாள் போன்ற வாயையுடைய சுறாமீனையும் மற்றும் வலிமையுள்ள பிற மீன்களையும், பின்னி வரிந்த வலைகளைக் கொண்டு பரதவர் மீன் பிடிக்கும் படகான திமில் மேலேறிக் கொண்டு கடல் கடந்து செல்வர் .இந்தத் திமில்களைப் பரதவர் வலம்புரி சங்குகளைக் கடலின் அடியில் இருந்து எடுப்பதற்கும், சுறாமீன்களை வேட்டையாடுவதற்கும் பயன்படுத்தினர்.[6] வலம்புரி சங்கை எடுக்கும் போதே முத்துக்களையும் பரதவ பெருமக்கள் கடலில் இருந்து இத்திமில் கொண்டு எடுத்ததாக எண்ணலாம்.
Tags: thimil, திமில்-Thimil, தெரசை சிவா, வம்சி, பதிப்பகம்