• தினம் தினம் திருநாளே!
இன்பமும் துன்பமும் கலந்தது மனித வாழ்க்கை. இன்பத்தின்போது மகிழ்ச்சியில் திளைக்கும் நாம், துன்பத்தின்போது துவண்டு போகிறோம்.  இந்தச் சூழ்நிலையில் கடவுளை நம்பும் சராசரி மனிதர்களான நமக்கு, அவரைச் சரண்டைவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், அதற்கும் நமக்குச் சரியான வழிமுறைகள் தெரியாது. 'தினம் தினம் திருநாளே..' என்ற தலைப்பில் சக்தி விகடன் இதழில் வெளியான உற்சாகமூட்டும் கட்டுரைகள்தான் இப்போது நூல் வடிவில் வெளியாகியிருக்கிறது.  குறை ஒன்றும் இல்லாத வாழ்க்கைக்கு உத்தரவாதமாக இதிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் விளங்குகிறது.  நூலாசிரியர் மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி எளிய நடையில் மகான்களன் புண்ணிய வரலாறைகளையும், புராணக் கதைகளையும் மேற்கோள் காட்டி, அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு நம்மை பக்குவப்படுத்தி, பழக்கப்படுத்திக் கொண்டால், தினம் தினம் திருநாள்தான் என்பதை அருமையாகப் புரிய வைக்கிறார். நமது அன்றாட வாழ்க்கையின் ஊடாக, ஆன்மிகப் பாதையில் நம்மை மேன்படுத்திக் கொள்ள இது நிச்சயம் உதவும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

தினம் தினம் திருநாளே!

  • ₹70
  • ₹60


Tags: thinam, thinam, thirunale, தினம், தினம், திருநாளே!, மஹாரண்யம் ஸ்ரீ முரளீதர சுவாமிஜி, விகடன், பிரசுரம்