பழைமையான பொருள்கள்தாம் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட
வரலாற்றை நமக்குப் புரிய வைக்கின்றன. ஆதி மனிதனின்
கலாசாரத்தையும், ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் வேட்டை
முறையையும், எகிப்தியர்களின் கலை நுணுக்கத்தையும், ஏதேன்ஸ்.
நகரத்தின் எழிலையும், ராஜ ராஜ சோழனின் ஆட்சித்திறனையும்,
'நெப்போலியனின் உடை அழகையும், புத்தரின் வாழ்வியலையும்,
ஹிட்லரின் மறுபக்கத்தையும், இன்னும் பலவற்றையும் நம் கண்
முன் விரிய வைக்கின்றன.
கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷங்கள் நம்மைக் காலச் சக்கரத்தில்
அமரச் செய்து நொடிப்பொழுதில் பின்னோக்கி அழைத்துச்
செல்கின்றன. கண்டுபிடிக்கப்பட்டு காணாமல் போன
பொக்கிஷங்கள் தீராத பதைபதைப்பையும் பெரு மூச்சையும்
சேர்த்தே தருகின்றன. கண்டுபிடிக்கவே முடியாத பொக்கிஷங்கள்
உண்டாக்கும் ஏக்கம் அளவிட இயலாதது.
கூழாங்கல் பொறுக்கப் போனவன் தென்னாப்பிரிக்காவின்
வரலாற்றை மாற்றியமைத்த கதை, பல நூற்றாண்டுகளாக கண்டு
கொள்ளப்படாமல் போடப்பட்ட புத்தரின் உருவம் - உலகின்
மதிப்புமிக்க சிலையான கதை, தாஜ்மஹாலைவிட மதிப்புமிக்க
மயிலாசனத்தின் கதை, காணாமல் போன ஒரு முகத்தின் கதை,
'பொக்கிஷங்களைப் புதைத்துவைத்து உலகத்துக்கே சவால்விட்ட மனிதரின் கதை, யாராலும் வாசிக்கவே முடியாத ஒரு புத்தகத்தின் அபூர்வ
கதை, எவராலும் நெருங்கவே முடியாத சில புதையல்களின் கதை, இந்தியாவில் இருந்து காணாமல் போன அரிய பொக்கிஷங்களின் கதை... இன்னும் இன்னும்.
ஒவ்வொரு பொக்கிஷத்தின் பின்னும் பல நூற்றாண்டு சரித்திரம் புதைந்துள்ளது.கால எந்திரத்தில் ஏறி, பயணம் செய்யலாம் வாருங்கள்!
Tags: thiranthidu, sesame, திறந்திடு, சீஸேம், முகில், Sixthsense, Publications