• திருக்குறளில் மேலாண்மை
திருக்குறளோ காலத்தால் பழைய நூல். மேலாண்மையோ நவீன யுகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் மந்திரச்சொல். இவை இரண்டையும் புதிய கோணத்தில் பொருத்திப் பார்க்கிறார் நூலாசிரியர். தொழிலில் தன் மேலாண்மைத் திறமையின் வெற்றிக்குத் திருக்குறளே துணை என்று பெருமை கொள்கிறார். இந்நூலாசிரியர் வி.சீனிவாசன், ஐசிஐசிஐ வங்கியின் உயர்பொறுப்பில் இருந்தவர், தற்போது 3ஐ இன்போடெக் நிறுவனத்தில் உயர்பதவி வகிக்கிறார். ஒரு கம்பெனியை எவ்வாறு திறமையாக நிர்வகிக்கலாம் என்ற மேலாண்மைக் கல்வி, தற்காலத்தில் இளைய தலைமுறையினரை வசீகரித்துக் கட்டிப்போட்டுள்ள ஒரு கல்வி. ஆனால் கல்வி மட்டுமே போதுமா? ஒரு நிர்வாகிக்கு வேண்டிய குணங்களென்ன? அதை எந்தக் கல்விக்கூடத்தில் கற்பது? ஒரு கம்பெனியின் தலைவருக்கு என்னென்ன குணங்கள் இருந்தால் அவர் கம்பெனியைத் திறம்பட நிர்வகித்துப் பெயரும் புகழும் பெறமுடியும், மனித வளத்தை எந்தக் குணம் கொண்டு திறமையாக நிர்வகிப்பது போன்றவற்றை திருக்குறளிலிருந்து லாகவமாகப் பெறும் வித்தையை நூலாசிரியர் எளிமையாகச் சொல்லியிருக்கிறார். மேலாண்மை தொடர்பான கருத்துகள் மட்டுமே இந்த நூலின் மையமாக இருந்தாலும், தலைவர் என்ன எதிர்பார்க்கிறார், அவர் எப்படிப்பட்ட குணங்கள் கொண்டவர்; அவருடைய செயல் ஓட்டங்கள் எப்படிப்பட்டவை என்பதைப் புரிந்து கொண்டு பணியாளரும் அவர் வாழ்வில் வெற்றியடைய உதவும் கருத்துகளும் இந்த நூலில் விரவியுள்ளன. ஒரு தலைவனுக்குப் பொருத்தமான குணங்களைச் சொல்வதோடு, உயர்ந்த குணங்கள் கைவரப் பெற்று, ஒரு ஊழியன் தானும் சிறப்பாகப் பெயர் பெற வழி சொல்கிறது குறள். மேலும் அந்த ஊழியனே பின்னாளில் நல்ல தலைவன் ஆவதற்கும் வழிகாட்டுகிறது. இவற்றை நூலாசிரியர் தெளிவாகக் காட்டியிருப்பது, மேலாண்மையைப் புரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக உள்ளது. காலத்தை வென்ற திருக்குறள், இன்றும் எல்லோருக்கும் அரணாகத் திகழ்கிறது. மேலாண்மை நோக்கில் மட்டுமின்றி, அனைவருக்குமே இன்றைய நவீன வாழ்க்கைக்கு ஏற்றவாறு நெளிவுசுளிவுகளோடு வாழ்வை அணுகும் வித்தையையும் இந்த நூல் கற்றுத் தருகிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

திருக்குறளில் மேலாண்மை

  • ₹60
  • ₹51


Tags: thirukuralil, melaanmai, திருக்குறளில், மேலாண்மை, வி. ஸ்ரீனிவாசன், விகடன், பிரசுரம்