இந்நூல் இரண்டு வரிகளையுடைய சிறி குறட்பாக்களால் ஆனது என்றாலும் திருக்குறளைப் போல மிகவும் அரிய பெரிய கருத்துக்களைத் தன்பாற் கொண்டதாகும். ஆகவே இதனை உரை யின் துணையின்றிக் கற்பது எளிதன்று. 'திருவருட் பயனு‘க்குப் பழைய உரைகளோடு இக்காலத்தில் எழுந்த உரைகளும் பலவாக உள்ளன. அந்த உரைகளினின்றும் இந்த விளக்கவுரை சில வகையில் வேறுபட்டு நிற்கிறது. இவ்வுரை நூலைப் படிக்கும்போது ஆசிரியரே வகுப்றையில் நேர் நின்று பேசுவது போன்ற உணர்ச்சி பிறக்கும் வகையில் எழுதப் பெற்றிருப்பது இந்நூலின் தனித்தன்மை என்று கூறலாம். இந்நூலைப் பெற்றுப் பயின்ற பலரும் தெரிவித்த கருத்து இது.