எடுத்தாளும் கருவை, கவித்துவம் சொட்டும் காட்சிப்படுத்தலுடன், மனத்தை அள்ளும் படிமங்களைக் கொண்டு படைக்கும் புனைவெழுத்தை மிக இயல்பாகவே கைவரப்பெற்றுள்ளவர் சத்யானந்தன். அவரது அழகியலில் இருக்கும் சொற்சிக்கனமும் கூர்மையும் பன்முகப்பார்வையும் வாசகனை சட்டென வசீகரிக்கக்கூடியவை. மேலும் பல நவீனத்துவ, பின்னவீனத்துவ ஆக்கங்கள் பிறக்கும் ஊற்றாக இருக்கும் அவரது படைப்புலகுக்கான இடம் சமகாலத் தமிழிலக்கியத்தில் மிக அழுத்தமானது. – ஜெயந்தி சங்கர். ***சத்யானந்தன்: பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சதங்கை, கணையாழி, நவீன விருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, புதியகோடாங்கி, இலக்கியச் சிறகு, கனவு உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணையதளங்களிலும் தீவிரமாகத் தனது படைப்புகளைப் பிரசுரித்துள்ளார் கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன். நவீன புனைகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகளை வித்தியாசமாகப் படைப்பவர்.
Tags: , சத்யானந்தன், தோல், பை-Thol, Pai