• தொலைந்துபோகும் நமது கிராமங்கள் - Tholaindhu Pogum Namadhu Gramangal
இந்நூலிலுள்ள தோழர் தங்கப்பாண்டியனின் பெரும்பாலான கட்டுரைகள் நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் பாங்கில் எழுதப்பட்டவை. பழந்தமிழ் இலக்கியத்திலும், தொழில்மயச்சாயல் ஏறாத ஆதி நிலப்பரப்பிலும் தோய்ந்த இவருக்குள் நிகழ்காலச் சமூகத்தின் போதாமைகளும் ஒவ்வாமைகளும் பிறழ்வுகளும் கடந்த காலத்தின் மீதான ஏக்கத்தை பெருகச் செய்கின்றன. அதே போன்று அந்தக் கடந்த காலம் அப்படி எண்ணியெண்ணி விம்மும் அளவுக்கான மகிமைகளைக் கொண்டதா என்கிற கேள்வியைத் தனக்குள்ளே எழுப்பிக்கொள்வதிலிருந்தும் இவரால் தப்பமுடியவில்லை. வழிவழியான மதிப்பீடுகளால் உருவாகும் வாழ்வியல் கண்ணோட்டம் சமகாலப் பொருத்தப்பாடுடையதா என்கிற பரிதவிப்பை இந்தக் கட்டுரைகள் அனைத்திலும் காணமுயும். - ஆதவன்தீட்சண்யா கதை, கவிதை எனும் புனைவிலக்கியத்திலும், கட்டுரை எனும் அபுனைவிலும் ஆற்றல் மிக்கவராக தங்கப்பாண்டியன் மிளிர்கிறார். பெரும்பாலான எழுத்தாளர்கள் புனைவில் வெற்றி பெற்றவராக இருப்பார்கள் அல்லது அபுனைவில் இயங்குபவர்களாக இருப்பார்கள். மிகச்சிலர் மட்டுமே இரண்டு வடிவங்களும் கைவந்தவர்களாக இருப்பார்கள். அப்படி ஒருவராக இரா.தங்கப்பாண்டியன் வெளிப்பட்டிருப்பது சிறப்பானது. புனைவின் வழியாக வாசகனின் உணர்மனதைத் தொட முடியும் என்றால், அபுனைவின் வழியாக வாசகனின் அறிவியல் நேரடித் தாக்குதலை நிகழ்த்த முடியும். அப்படியான ஒரு ரசவாதத்தை வாசகனுக்குப் பரிசளிக்கிறார் இந்நூலாசிரியர்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

தொலைந்துபோகும் நமது கிராமங்கள் - Tholaindhu Pogum Namadhu Gramangal

  • ₹160


Tags: tholaindhu, pogum, namadhu, gramangal, தொலைந்துபோகும், நமது, கிராமங்கள், -, Tholaindhu, Pogum, Namadhu, Gramangal, இரா.தங்கப்பாண்டியன், டிஸ்கவரி, புக், பேலஸ்