இனி நீங்கள் படிக்கப்போவது எல்லாமே உங்களுக்கு என்றென்றும் நினைவில் இருக்கும். வித்து ஊன்றப்பட்டு விட்டது. இனி விளைச்சலை அறுவடை செய்யுங்கள்.இதுவரை செயல்பட்டு வந்ததைவிடவும் திறமையான முறையில் செயல்படுவதற்கு நீங்கள் விரும்பினால் இதில் சொல்லப்பட்டிருக்கும் விசயங்களை அப்படியே பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்தால் இந்த உலகில் எவரும் சாதிக்காத பல செயல்களைக் கண்டிப்பாக உங்களால் சாதிக்க முடியும்.இதைப் படித்துப் பார்ப்பது உங்களது நினைவாற்றலை வளர்ப்பதற்காக மட்டும் அல்ல. உங்கள் செயல் திறனை அதிகரிப்பதற்காகவும்தான் என்பதை நினைவில் வையுங்கள்.இந்த வழிமுறைகள் முறையாகச் சோதிக்கப்பட்டவை. பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள்ள முடிபவை. பலரும் பயன்படுத்திப் பார்த்துப் பலன் கண்டவை.வணிகர்களுக்கு மட்டும்தான் என்றில்லாமல் மற்றவர்களும் என்னென்ன வழிகளைப் பின்பற்றினால் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும் என்பது இங்கே தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.நினைவாற்றல் என்பதும் அத்தகைய ஓர் ஆற்றல்தான். வணிகப் பெருமக்களுக்கு இந்த ஆற்றல் எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர்களுக்கு வளம் சேரும்.எல்லோருக்குமே எல்லாவிதமான ஆற்றல்களும் இருந்து விடுவதில்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வகையான ஆற்றல் இருக்கும். தக்க பயிற்சிகளின் மூலம் மேலும் அவற்றை அவர்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.
தொழிலதிபர்கள் வணிகர்களுக்கான நினைவாற்றல்
- Brand: டாக்டர் ம.லெனின்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
- ₹77
-
₹65
Tags: thozhilathiparkal, vanikargal, vazhvil, ninaivatral, தொழிலதிபர்கள், வணிகர்களுக்கான, நினைவாற்றல், டாக்டர் ம.லெனின், Sixthsense, Publications