துணுக்குகள் இதழியலில் முக்கியப் பங்கு பெறுகின்றன. நடந்து முடிந்த, நடக்கின்ற, நடக்கப் போகின்ற தீவிரச் செய்திகளை மட்டுமே படித்துக் கொண்டிருப்பதில் மனிதர்களுக்கு அலுப்பும் சலிப்பும் வந்துவிடும். அதனால் இதழ்களில், இதழ்களை விரிய வைத்துச் சிரிக்க வைக்கும் பகுதிகளும் தேவை. ‘வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்பர். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்கிறார் வள்ளுவர். எத்தகைய சிந்தனைக்குரிய கருத்தையும் நகைச்சுவையுடன் கூறலாம். அதுமட்டுமன்றிப் பெரிய பெரிய செய்தியாக வாசிப்பதைவிடச் சின்னச் சின்னச் செய்திகள், கருத்துகள், குறிப்புகள் இவற்றைப் படிப்பதில் வாசகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். அதனால் சிறிய செய்தி என்ற பொருளில்தான் ‘துணுக்கு’ என்ற பெயர் வந்தது. ‘துக்கடா’ என்று கூட முன்பு ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் சின்னச் சின்னச் செய்திகள் கட்டம் கட்டி வருவதுண்டு. மக்கள் மனத்தில் செய்தித்தாள் படிக்கும் ஆர்வத்தை இவை வளர்க்கின்றன. அத்துடன் நிறையச் செய்திகளை அறிந்து கொள்ளவும் இவை பயன்படுகின்றன.
துணுக்குத் தோரணங்கள் - Thunukku Thoranangal
- Brand: சி.எஸ். செல்வம்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹40
Tags: thunukku, thoranangal, துணுக்குத், தோரணங்கள், , -, Thunukku, Thoranangal, சி.எஸ். செல்வம், சீதை, பதிப்பகம்