நீண்ட நாட்களாக சந்தையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் ஒரு பொருள் ஏதோ ஒரு தருணத்தில் மவுசு குறைந்து விற்பனையில் அதள பாதாளத்துக்குப் போய்விடுவது உண்டு. திடீரென்று அதே பொருளுக்கு மார்க்கெட்டில் ‘மறுவாழ்வு’ கிடைக்கும். விற்பனை உச்சத்தைத் தொடும். இது எப்படி சாத்தியமாகிறது? கொலைகளும் கொள்ளைகளும் அன்றாட சம்பவங்களாகி, நாளுக்கு நாள் எண்ணிக்கையில் அவை அதிகமாகி ஊரே பயந்து நடுங்கும் பதற்றமான சூழல் நிலவும். திடீரென்று குற்றங்களின் எண்ணிக்கை குறைகிறது. மக்கள் பயமின்றி ஊரில் நடமாடுகிறார்கள். இந்த மாற்றத்துக்கு உண்மையில் என்ன காரணம்? இதுமாதிரிதான் ஒரு புத்தகம் ஒரே இரவில் ‘பெஸ்ட் செல்லர்’ வரிசையில் சேர்ந்துவிடுகிறது. திடீரென்று ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட, தொற்றுநோய் போல இது மற்றவர்களுக்கும் அடுத்தடுத்துப் பரவிவிடுகிறது. பிள்ளையார் பால் குடித்தது... பெண்கள் திடீரெனப் பச்சைப் புடவைகளை அணிந்தது... ஒரு வங்கி திடீரென திவால் ஆனது... இப்படிக் காட்டுத் தீ போல, திடீரென ஒரு நல்ல விஷயமோ ஒரு வதந்தியோ அதி விரைவாகப் பரவி, ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதைப் பார்க்கிறோம். இந்த மாற்றங்களுக்கெல்லாம் ஆரம்பப் புள்ளி
டிப்பிங் பாயின்ட்
- Brand: மால்கம் க்ளேட்வெல்
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹120
-
₹102
Tags: tipping, point, டிப்பிங், பாயின்ட், மால்கம் க்ளேட்வெல், விகடன், பிரசுரம்