ஒரு வல்லுறவுச் சம்பவம்.
பாதிப்புக்கு ஆளான மரியம்மை தன்னைப் பலியாக்கியவர்களுக்கு எதிராக வழக்காடுகிறாள். அவள்மீது அனுதாபம்கொண்ட வழக்கறிஞர் ஞானமணி துணைநிற்கிறார். அவளுக்கு அடைக்கலம் தரும் பொன்னம்மை முதலில் கரிசனம் காட்டுகிறாள். உண்மை தெரிந்ததும் விரட்டுகிறாள். சம்பவத்தின் சூத்திரதாரியான குஞ்சுப் பிள்ளை இன்னொரு உண்மையைச் சொல்கிறான். விவகாரத்தைச் செய்தியாக்கிப் பலன்கண்ட இசக்கி உண்மையை விற்கிறான். இவற்றையெல்லாம் தொகுத்துச் சொல்லும் கதைசொல்லி இன்னொரு உண்மைக்கு அதிர்கிறார்.
எது உண்மை, யார் சொல்வது உண்மை, உண்மைக்கு என்ன நிரூபணம் - இவை குறுநாவல் எழுப்பும் கேள்விகள். உண்மை என்பது அவரவர் காணும் தோற்றம். ஆனால் முற்றான உண்மை இருக்கிறது. அது திரைகளுக்கு, ஒன்றல்ல ஆயிரம் திரைகளுக்கு அப்புறம் ஒளிந்திருக்கிறது.
ஏறத்தாழ நான்கு பதிற்றாண்டுகளுக்கும் முன்னர் எழுதப்பட்ட குறுநாவல் படைப்பு மேற்கொள்ளும் உண்மையான விசாரணையால் இன்றைய எதார்த்தங்களுடனும் பொருந்திப் போகிறது.
Tiraikal Aayiram
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹100
Tags: Tiraikal Aayiram, 100, காலச்சுவடு, பதிப்பகம்,