• டூரிங் டாக்கீஸ்-Tooring Taakkeesh
எவ்விதமான ஆசைகளையும் எனக்கு வளர்க்காமல் கிராமத்து மனிதர்களின் அன்போடும் பழக்கவழக்கங்களோடும் பொய்யில்லா சிரிப்போடும் பொழுது புலர பறக்கும் பறவைக்கூட்டத்தோடும் சில்லென்று உறைந்து கிடந்த வெதுவெதுப்பான குளத்தோடும் வாழ்க்கை துவங்கிய போது, ஒருகண்சிமிட்டும் வேளையில் 30க்கு 40ல் அச்சாகியிருக்கும் ஒரு சுவரொட்டியும் இரண்டு விரல்களின் இடுக்கில் பிடித்து சூரிய ஒளியில் வைத்து பார்த்த ஒரு சினிமா காட்சித்துண்டான ஒரு பிரேமும் முடிவுசெய்தது என் கனவை. அந்த கனவு நனவான, அடுத்தடுத்த கனவுகளை விதைத்த, அதை நனவாக்கும் பாதையில் எனக்கு கிடைத்த சுவையான அற்புதமான அலாதியான அனுபவங்களை பற்றித்தான் இந்த புத்தகம் உங்களோடு பகிர்ந்துகொள்ளப்போகிறது...இதை எதனால் நீங்கள் படிக்க வேண்டும்? என் வாழ்க்கையை படிக்கச் சொல்வதில் உங்களுக்கு என்னலாபம் அல்லது எனக்கு என்ன கிடைக்கப்போகிறது என யோசிக்கலாம்..அனுபவங்களும் அது கிடைக்க காரணமான நிகழ்ச்சிகளும் வேறுவேறாக இருக்கலாம். ஆனால் உணர்வுகளும் அது பெறும் சந்தோசங்களும் அல்லது வலிகளும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.. சில நேரம் இந்த புத்தகம் படிப்பவர்களுக்கு நம்மைப்போலவே இவர் என உணரலாம்.. இல்லையெனில் இது நமக்கான குழப்பத்திற்கு விடை என தோணலாம்.. அல்லது நானும் இப்படியாகலாம் என உங்களுக்கான கனவை விதைக்கலாம்.. சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் வாசிப்பவர்களை அடுத்த இலக்கிற்கு இப்புத்தகம் நகர்த்தும்.. அது உறுதி..

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

டூரிங் டாக்கீஸ்-Tooring Taakkeesh

  • ₹250


Tags: tooring, taakkeesh, டூரிங், டாக்கீஸ்-Tooring, Taakkeesh, சேரன், ரா. கண்ணன், வம்சி, பதிப்பகம்