நிச்சயமான வெற்றிக்கு இதுதான் அடிப்படை என்று ஒரே ஒரு விஷயத்தை ஒரே வார்த்தையில் அழுத்தந்திருத்தமாகச் சொல்ல முடியுமா? முடியும். தரம்.சுண்டைக்காய் அளவில் தொடங்கப்பட்ட பல நிறுவனங்கள், இன்று மாபெரும் சாம்ராஜ்ஜியங்களாகக் கொடிகட்டிப் பறப்பதன் ரகசியம், தரம்தான்.எங்களை விட்டால் இனி யாரும் இல்லை என்று கொக்கரித்துக்கொண்டிருந்த சில நிறுவனங்கள், திடீரென இருக்கும் இடம் தெரியாமல் போவதற்குக் காரணமும் தரம்தான்.தரத்தை எப்படிக் கட்டமைப்பது? அதைவிட முக்கியமாக, எப்படிக் கட்டிக்காப்பது? தர நிர்வாகம் என்றால் என்ன? இது செலவு பிடிக்கும் வேலையா? உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும் தரம் என்று ஒன்று உண்டா? அதை நம்மாலும் அடைய முடியுமா?தர நிர்வாகம் பற்றிய முழுமையான, விரிவான அறிமுகத்தை முன்வைக்கும் இந்தப் புத்தகம் ஒரு பிசினஸ் வழிகாட்டி மட்டுமல்ல; உங்கள் வாழ்க்கைக்கான வழிகாட்டியும்கூட.
TQM – தர நிர்வாகம்: ஓர் அறிமுகம்-TQM – Thara Nirvaagam : Orr Arimugam
- Brand: சிபி கே. சாலமன்
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability:
-
₹75
Tags: , சிபி கே. சாலமன், TQM, –, தர, நிர்வாகம்:, ஓர், அறிமுகம்-TQM, –, Thara, Nirvaagam, :, Orr, Arimugam