ஈபில் கோபுரம் எங்கே இருககிறது என்று நேரடியாகக் கேட்டால் பாரிஸ் நகரில் என்று சொல்லிவிட்டுப் போவது குழந்தைக்கு’ கூட இயலும். ஈவில் கோபுரத்தின் இருப்பிடம் பாரிஸ் என்பது ஒரு தகவல்.
பிரன்ஸ் என்றாலே உங்களுக்குப் பிரெஞ்சுப் புரட்சி நினைவுக்கு வரும். பாரிஸ் நகரம் மனதில் நிழலாடும். அந்நகருக்குப் பெருமை சேர்க்கும் ஈபில் கோபுரம் உலகையே ஈர்ப்பதை உணர்வீர்கள்.
இம்மாதிரி ஓன்றுக்கொன்று தொடர்புடைய பல விசயங்களை இணைத்தால் ஒரு ‘சங்கிலிக் கோர்வை கிடைக்கும். இந்த சங்கிலிப் பிணைப்பு எவ்வளவு நீளமாக வேண்டுமானாலும் நீளலாம்.
உங்களுக்குத் தெரிந்த விசயங்கள் நிறைய இருக்கலாம். எவ்வளவுதான் தெரிந்து வைத்திருந்த போதிலும் தெரியாத விசயங்களும் இருக்கத்தான் செய்யும், அவ்வாறு உங்களுக்குத் தெரியாமல் இருக்கக் கூடிய தகவல்களை முற்றிலும் புதிய பாணியில் உங்களுக்குத் தெரிவிப்பதற்காகத்தான் இந்த முயற்சி.
இதெல்லாம் உங்களுக்குத் தெரிகிறதா பாருங்கள் என்று மாதிரிக்காகச் சிலரிடம் சில கேள்விகளை முன் வைத்த போது அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் விளைவாகவே இந்தப் புத்தகம் உருவாகி இருக்கிறது. வரலாறு படிப்பவர்களுக்கு இது அருமையான துணைவனாக விளங்கும்.சுற்றுலாவில் விருப்பம் கொண்டவர்கள் புதுப் புது இடங்களைப் பார்வையிட வழி காட்டும்.
உங்கள் பொது அறிவு மேம்படும் நினைவாற்றல் வலுப்படும் உங்களிடம் யாராவது மாறான கருத்துக்களைத் தெரிவிக்க நேர்ந்தால் அவற்றை ஆணித்தரமாக மறுத்து வாதிட்டு வெற்றி பெறவும் இதிலுள்ள தகவல்கள் உங்களுக்கு உதவும்.
உலகின் ஒப்பற்ற கட்டடக்கலை படைப்புகள்
- Brand: டாக்டர் ம.லெனின்
- Product Code: வானவில் புத்தகாலயம்
- Availability: In Stock
- ₹50
-
₹43
Tags: ulagin, oppatra, kattada, kalai, padaippugal, உலகின், ஒப்பற்ற, கட்டடக்கலை, படைப்புகள், டாக்டர் ம.லெனின், வானவில், புத்தகாலயம்