• உள்ளங்கையில் உடல் நலம்
`புகை, மது உடல் நலத்திற்குக் கேடு என்ற வாசகத்தை திரைப்படங்களிலும், அட்டைகளிலுமச்சிடும் எந்த அரசும் உற்பத்தியை நிறுத்தி அதன் பொருட்டு வரும் வருமானத்தை இழக்கத் தயாராக இல்லை. ’ `ஜாகிங் போன்றவை நான்கு கால் பிராணிகளுக்கானது. உண்மையில் ஜாகிங் தரும் எல்லா பயன்களையும் நடைப்பயிற்சியே தருகிறது. உடற்பயிற்சி உபகரணங்கள் விற்கும் நிறுவனங்கள் விளம்பரத்திற்காக சொன்ன பொய்யை நம்பி இன்று ஊரே ஓடிக்கொண்டிருக்கிறது.’ `சரியாகத் தூங்காதவர்கள் மனநோயாளியாகி விடுவார்கள் என்கிற கூற்றில் உண்மை இல்லை. மனநோய் உள்ளவர்கள் பொதுவாகக் குறைவாகத் தூங்குபவர்கள். தூக்க மாத்திரை தயாரிக்கும் நிறுவனங்கள் ஆராய்ச்சி என்ற போர்வையில் திட்டமிட்டு பரப்பிவிட்ட கட்டுக்கதைகள் இது.’ `கொழுப்புச் சத்து உயிரின் சாரம். ஒருவர் ஒட்டுமொத்தமாகக் கொழுப்புச் சத்தைத் தவிர்த்து வந்தால், மிக விரைவில் முதுமை அடைந்துவிடுவார். ஏனென்றால் உயிரணு (செல்) புதுப்பிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. நம் கொழுப்புச் சத்து அளவைக் குறைப்பதற்கான ஒரே வழி நம் பெற்றோர்களை மாற்றிக்கொள்வதுதான்!’ `நீரிழிவு நோயாளிகளுக்கு கோதுமையைவிட அரிசியே நமது சீதோஷ நிலையில் சிறந்த உணவு.’ இவற்றையெல்லாம் சொல்லியவர் வெறும் யூட்யூப் பிரபலம் அல்ல. நீண்ட நெடிய மருத்துவ அனுபவம் கொண்ட கார்டியாலஜிஸ்ட். மருத்துவ மற்றும் சமூக பங்களிப்பிற்கான நாட்டின் உயரிய அங்கீகாரமான பி.சி.ராய் விருது பெற்றவர்- பத்ம பூஷன் டாக்டர்.பி.எம்.ஹெக்டே. நவீன மருத்துவத்தின் அபத்தங்களையும், அபாயங்களையும் பற்றி டாக்டர். ஹெக்டே தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். ஆயுர்வேத மருத்துவம் மனிதகுலத்திற்கு எப்பேற்பட்டவொரு அருட்கொடையாகத் திகழ்கிறது, மேற்கத்திய நாடுகளின் சர்வாதிகாரத்தில் இயங்கும் ’மருத்துவ மாஃபியா’ பன்னாட்டு நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளின் மீது ஏவிவிடும் தவறான கற்பிதங்களையும், பரிசோதனைகளையும் போட்டுடைக்கும் காணொலி(Ted Talks) சமீபமாக சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. ஆங்கிலத்திலும், கன்னடத்திலும் உடல் நலம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதி வருகிறார். அந்த வகையில் ‘How to maintain Good Health’ என்ற நூலின் தமிழாக்கம் இது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

உள்ளங்கையில் உடல் நலம்

  • ₹199


Tags: ullangaiyil, udal, nalam, உள்ளங்கையில், உடல், நலம், டாக்டர் பி.எம்.ஹெக்டே, வானவில், புத்தகாலயம்