தன் அனுபவங்களை, உணர்வுகளைக் கலையாக்கும் ஒருவராக உமா வரதராஜன் அவருடைய படைப்புகள் மூலம் அடையாளம் காணப்பட்டவர். உமா வரதராஜனின் படைப்புகள் வெளிப்படுத்தும் சமூக யதார்த்தமும் அவை ஏற்படுத்தும் கலைப் பாதிப்பும் ஆழமானவை. சமூகம் தன்னகத்தே கொண்டுள்ள பொய்மையை, போலித்தனங்களை, முரண்களை அவை அம்பலப்படுத்துகின்றன. அவற்றுக்கிடையே அகப்பட்டு நசுங்கும் மனித உள்ளத்தின் அவஸ்தையை வாசகன் மனதிலும் தொற்றச் செய்கின்றன. இதுவே இவரது கலையின் வெற்றி.இவருடைய கதைகள் கூறும் வாழ்க்கை அனுபவங்கள் வெவ்வேறாக இருப்பினும் அவற்றுக்கிடையே ஒரு பொதுத் தன்மை உண்டு. இவ்வனுபவங்கள் எல்லாம் புறச் சூழலுக்கும் அல்லது சமூகத்துக்கும், தனி மனிதனுக்கும் இடையே உள்ள முரண்பாட்டின் வெளிப்பாடுகளாகவே அமைகின்றன.சுமார் முப்பது ஆண்டுகால இடைவெளியில் அவரால் எழுதப்பட்ட கதைகளின் முழுத் தொகுப்பு இது.This book is a collection of short stories by Srilankan Tamil writer Uma Varadarajan.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Uma Varatharajan Kathaikal

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹225


Tags: Uma Varatharajan Kathaikal, 225, காலச்சுவடு, பதிப்பகம்,